• Fri. Mar 29th, 2024

இந்தியாவின் மிக பிரமாண்ட ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் பாய்கிறது.

ByA.Tamilselvan

Oct 22, 2022

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 இன்று நள்ளிரவில் விண்ணில் ஏவப்படுகிறது.
இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 கனரக ராக்கெட்டை இன்று நள்ளிரவு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இத்திட்டமானது இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ‘ஒன்வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலை தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்ப இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *