ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இன்று ஜெர்மனி சென்றார். ஜெர்மன் வாழ் இந்தியர் மோடியுடன் செல்பி எடுத்துமகிழ்ந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய நேரப்படி சற்றுமுன் அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார். அங்கு உயரதிகாரிகள் குழு அவரை வரவேற்றது. ஜெர்மனி நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், பெர்லின் நகரில் வசிக்கும் இந்திய மக்களோடு கலந்துரையாடினார். அப்போது செல்ஃபி எடுத்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாகமடைந்தனர். அங்கு குழுமியிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் “2 0 2 4 : Modi Once More” என உற்சாக முழக்கங்களை எழுப்பி பிரதமரை வரவேற்றனர்.
நாளை டென்மார்க் செல்லும் பிரதமர், அந்நாட்டின் தலைவர்களைச் சந்திக்கிறார். வருகிற 4-ம் தேதி, டென்மார்க்,பின்லேன்ட் ஜஸ்லேன்ட்,சுவிடன் நார்வே, ஆகிய நாடுகளின் பிரதமர்களோடு நரேந்திர மோடி, இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்நாடுகளின் தலைவர்களோடு, அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் நிறைவாக, பிரதமர் மோடி, ஃபிரான்ஸ் செல்கிறார். அதிபர் இமானுவேல் மார்கோனை சந்தித்து பேசுகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது, ரஷ்யா-உக்ரைன் விவகாரம் குறித்தும், இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
மோடியுடன் செல்ஃபி எடுத்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாகம்
