• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய இந்திய படையினர்…

Byமதி

Oct 25, 2021

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகாரத்தை அடுத்து இந்திய படையினர் தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தீவிரமாக பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை நடக்கிறது. இதில் ராணுவத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

நேற்று பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பாட்டா டுர்ரியன், மென்டார் வனப்பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை மற்றும் வெடிகுண்டுவீச்சு நடந்தது. ரஜவுரியின் தன்னமண்டி பகுதியிலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்தது.

மென்டாரில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஜியா முஸ்தபா என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த சண்டையில் 2 போலீஸ்காரர்கள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்கிறது.