பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருமதி வி.கே.சசிகலா அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கு காலை 8 மணிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். மேலும், இதனைத் தொடர்ந்து, மாரியம்மன் தெப்பகுளம் கரையில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு காலை 8.30 மணிக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

எனவே, காவல் துறையினர், சசிகலா அவர்களுக்கு அனுமதியும், தகுந்த பாதுகாப்பும் வழங்கக்கோரி மதுரை மாநகர காவல் துறையினருக்கு, அஇஅதிமுக-வை சேர்ந்த அக்கட்சியின் முன்னாள் மதுரை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெ. ஆர்.சுரேஷ் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.