தென் கொரியா தலைநகர் சியோலில் தெற்கு ஆசியா ரோலர் ஸ்கேட்டிங் காம்பியன்சிப் போட்டி நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது.

ரோலஸ் ஸ்கேட்டிங் போட்டி பெண்கள் பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதி வெற்றி பெற்று தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷி பட்டத்தையும் பெற்றது.
இதே போல் ஆண்கள் பிரிவு ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது இதுவே முதல் முறை இந்திய பெண்கள் அணி ரோலர் ஸ்டேட்டிங் பிரிவில் சிறப்பாக விலையாடி நமது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை.

இந்திய ரோலர் ஸ்கேட்டிங் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த 32 வீரர்கள் ரோலர் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை யோகிதா மற்றும் பயிற்சியாளர் அலெக்ஸ் கூறுகையில்:
தென்கொரியாவில் நடைபெற்ற ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வந்துள்ளோம். எட்டு நாடுகள் பங்கேற்ற போட்டியில் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளோம், சீனியர் ஆண்கள் பிரிவு வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் சைனாவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் வெண்கலம் என்கின்றோம் தற்போது தங்கம் வென்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி.