புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தின விழா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முருகேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவியநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி, புதுக்கோட்டை வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் தனபதி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள் வேங்கை அருணாசலம், வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செம்பை மணி, ஆலங்குடி தமிழ்ச் செல்வன், திருக்கோகர்ணம் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது, மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குட்லக் அப்துல்லா, மாவட்ட ஓபிசி அணித் தலைவர் ஆனந்தன் , மாவட்ட கலைப் பிரிவுத் தலைவர் மேப் வீரையா மாவட்டப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், காதர் மைதீன், காமராஜபுரம் தமிழ்ச்செல்வன் அன்னவாசல் வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட எஸ். சி.பிரிவுத் தலைவர் பால்ராஜ், மாநகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மணி ஆறுமுகம், நாச்சிமுத்து, சுப்ரி ஜமீல் காதர் மீனாட்சி சுந்தரம், ராஜசேகர் ராமமூர்த்தி, அருள்முருகன், வம்பன் தினேஷ் குமார், சகாய ராஜ் அன்னவாசல் நகரத் தலைவர் செல்வராஜ், முக்கணாமலைப்பட்டி முகமது கனி அன்னவாசல் ரபீக் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் கவுரி (வடக்கு) சிவந்தி நடராஜன் (தெற்கு) உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.







