• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம்

Byகுமார்

Jun 22, 2022

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையிலும், விருதுநகர் மாவட்ட தலைவர் ஞானேஸ்வரன் முன்னிலையிலும்
100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.