• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

ByBala

Apr 24, 2024

சிவகாசியில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு மட்டுமின்றி, அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தினர்.