• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பந்திக்கு முந்திய கே.ஜி.எப் அதிர்ச்சியில் இந்திய சினிமா

ஏப்ரல் 14ம் தேதி (14.04.2022) சித்திரை திருநாள் அன்று KGF 2 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2 பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன கே.ஜி.எப் படத்தின் கதாநாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த 2021ஆம்ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்ததுஇந்நிலையில் நாயகன் யாஷின் பிறந்தநாளான இன்று KGF 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் வெளியாக வேண்டியRRR, ராதேஷ்யாம், வலிமை ஆகிய மூன்று படங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கை க்காகஅரசு எடுத்த நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் காரணமாக வசூல் பாதிக்ககூடும் என கருதி எப்போது வெளியீடு என்பதை குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொங்கல் விடுமுறைக்கு பின் பொது ஊரடங்கு வரலாம் என வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன இந்த நிலையில் ஏப்ரல் 14 நாங்கள் வருகிறோம் அதனை கணக்கில் கொண்டு உங்கள் படங்கள் வெளியீட்டு தேதியை தீர்மானியுங்கள் என அகில இந்திய சினிமாவுக்கு கே.ஜி.எப்படக்குழு எச்சரித்துள்ளதா, அறிவுறுத்தியுள்ளார்களா என தமிழ் சினிமா வட்டாரத்தில் விவாதம் எழும்ப தொடங்கியுள்ளது பந்திக்கு முந்தியுள்ளது கே.ஜி.எப்