• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டி20 உலகக்கோப்பை – இந்தியா அபார வெற்றி

Byமதி

Nov 6, 2021

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் எடுத்தது.

இந்தியா அணி சார்பில் ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஸ்காட்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சே 24 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

துவக்கம் முதலே ஸ்காட்லாந்து பந்து வீச்சை இந்திய அணி புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல் ராகுல் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன. 6.3 ஓவர்களில் 89 ரன்கள் அடித்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 19 பந்துகளில் கே.எல் ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.