• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மழை காரணமாக இந்தியா- நியூசிலாந்து முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது

ByA.Tamilselvan

Nov 18, 2022

மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வெலிங்டனில் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.