• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது- பிரதமர் பெருமிதம்

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் செல்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இரு மடங்கு அதிகமாகி இருப்பது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 7 மாதங்களுக்குள் மொபைல் போன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது.
இது குறித்து மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.