• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மரக்கன்றுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கும் சுயேட்சை பெண் வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பிரச்சாரத்திற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 24 வது வார்டில் போட்டியிடும் பெண் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா கரிகாலன் 24 வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நடந்து செல்லும் வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

தனது வார்டு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும், மேலும் இந்த மரம் வளர்ந்து எவ்வாறு பலன் கொடுக்குமோ அதே போல் தானும் என்னுடைய பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து மக்களுக்கு பலன் உள்ள வகையில் செயலாற்றுவேன் என்று தெரிவித்தார்.