சுதந்திர காற்றில் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கும் இந்த பொன்னாள்.
எல்லோர் உள்ளத்திலும் சரி இல்லத்திலும் சரி மனமகிழ்வாக ,மன போன்று சுதந்திர வானில் பறந்து செல்லும் பறவைகள் போல், எங்கள் பயணம் மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து முன்னோர்கள் வாங்கி தந்த சுதந்திரம்.

நமது வாழ்வில் ஒரு மாபெரும் புரட்சியை அடுத்து தலைமுறைக்கு, அன்பளிப்பாக அளித்த நன்கொடை. கருவில் இருக்கும் குழந்தை முதல் கல்லறை போகும் நொடி வரை கூட மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கும் சென்றாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கனியண் பூங்குன்றன் வாக்கிர்கிணங்க சென்னை எம் எம் டி ஏ காலனியில் அமைந்துள்ள வாராஹி என்னும் தனியார் அறக்கட்டளையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த அறக்கட்டளையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச டியூசன்சென்டர் மற்றும் கணினி பயிற்சி வகுப்பு, யோகா, தினமும் மதியம் அன்னதானம், மருத்துவ முகாம் என தொடர்ச்சியாக பல சமூக சேவைகள் இலவசமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி, நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் சமூக சேவகருமான ஆர் வாராஹி பிரகாஷ் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்.

இந் நிகழ்வில் சமூக சேவகி சி.ஐ.டி.நகர் சுஜாதா, வழக்கறிஞர் சே.சென்னம்மாள், வழக்கறிஞர் அருள், ரமேஷ் ரஜினி, நடிகர் பாலாஜி சமூக சேவகர் ரஜினி கனி, குணசேகரன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் இவ்விழாவிற்கு திருமதி பரமேஸ்வரி, திருமதி சவீதா, திருமதி லதா, நீலாம்பிகை செல்வி, மோனிகா மற்றும் இந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரியா பிரதீப் , பாலகிருஷ்ணன், பாமா அமுதா, செல்வி ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
