78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடுமக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மதுரை மாவட்டம் திருநகர் 2வது பேரூந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள தாய்மடி இல்லத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் கௌரவ தலைவர் ப.குணா ,
கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து தேசியகீதம் பாடல் பாடி, தாய்மடி இல்லத்தில் இருக்கக்கூடிய சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு தேசிய கொடி மற்றும் இனிப்புகள் வழங்கி, அவர்களோடு சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், தாய்மடி இல்லம் நிறுவனர் சேதுசுரபி தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் கௌவர தலைவர் ப.குணா இளைஞர் அணி செயலாளர் குமார், இணைச்செயலாளர் சௌந்தரபாண்டியன், மகளிர் அணி அமுதா, விவசாய அணி செயலாளர் விக்னேஷ் மற்றும்தாய்மடி இல்ல நிர்வாகிகள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டு, சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.
சுதந்திர தினவிழா
