• Sat. Apr 20th, 2024

அதிகரிக்கும் ப்ராங்க் வீடியோக்கள்… காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

Byகாயத்ரி

Sep 8, 2022

ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என சென்னையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்த நிலையில் ப்ராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *