• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் அதிகரிப்பு

Byவிஷா

Oct 10, 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப்-4 தேர்வை நடத்தி வருகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு, ஜுன்-9 ம் தேதி நடைபெற்று முடிந்தது. சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் சுமார் 15,88,000 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்துள்ளது.