மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு தேவர் சிலை பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டின் மேல் பகுதியில் ஜன்னல் கட்டைகள், கால்நடைக்கு தேவையான வைக்கோல்-யை வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரது வீட்டின் அருகே காய்ந்து கிடந்த கருவேல மரத்தில் வைத்த தீ பரவி இஸ்ரவேல் வீட்டின் மேல்பகுதியில் இருந்த பொருட்கள் மீது பட்டு தீ மளமளவென பரவி புகை மண்டலமாக காணப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேல் பகுதியில் இருந்த ஜன்னல் கட்டைகள், வைக்கோல் என 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தாக இஸ்ரவேல் தெரிவித்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.