• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்..,

ByK Kaliraj

Jul 18, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில்நேற்று முன்தினம் மது போதையில் வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் கொலை தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே பள்ளியில் கடந்த ஓராண்டுக்கு மாணவர்கள் இருவர் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் பள்ளியில் தங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு இல்லை எனவும் மாணவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பள்ளி வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நேற்று பணியை புறக்கணித்து பள்ளி வளாக முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் திருத்தங்கல் காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உறுதி அளித்ததன் அடிப்படையில் இன்று முதல் பள்ளி வளாகத்தில் காவல் என உறுதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் பள்ளி வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சார்பு ஆய்வாளர் ஒரு தலைமை காவலர் என காலை முதல் மாலை வரை இரண்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு மாணவர்களின் விரும்பத்தகாத செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.