தமிழக வெற்றி கழகம் சார்பில் தனக்கன்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது அதேபோல் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தனக்கன் குளம் கிராம தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பணம் ரொக்கமாக வழங்கப்பட்டது .






