• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

18 மணி நேரம் இடைவிடாமல் ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவிக்கு ஊக்கத் தொகை

ByTBR .

Jan 20, 2024

சிவகாசி, விஜயகரிசல்குளம் அருகே வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரி இடைவிடாது 18 மணி நேரம் ஓவியம் வரைந்து
ஆசிய புக் ஆப் ரிக்கார்டு, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, கலாம் உலக சாதனை
என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இச்சாதனை மாணவி புவனேஸ்வரியை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் அழைத்து பாராட்டி, இன்னும் பல
சாதனைகள் படைக்க ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். திருத்தங்கல்
மேற்கு பகுதி செயலாளர் சரவணக்குமார், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்
செல்வகுமரன், கார்த்திக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.