• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா

ByN.Ravi

Feb 24, 2024

மதுரை அருகே, சோழவந்தானில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய விடியல் எஜுகேஷன் டிரஸ்ட், பழனி ஆயக்குடி மக்கள் மன்றம், வித்யாதரன் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சோழவந்தான் ஆர்.எம்.எஸ். காலனி ரோட்டரி ஸ்டடி சென்டரில் தொடங்கியது. இவ்விழாவிற்கு, ஆர் .எம் .எஸ். காலனி டெவலப்மெண்ட் மற்றும் விஇடி மேனேஜிங்ட் ரஸ்டி பொன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டிரஸ்டி கள் ஆறுமுகம், செல்வம், வருமான வரி ஆணையர் ரவி ராமச்சந்திரன், கற்பகம் பவுண்டேஷன் அருணா ராஜ்மோகன், திருநகர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தாண்டவம், ஆசிரியர் மதன் மோகன், ஆர். எம். எஸ். காலனி குடியிருப்பு நலச்சங்கத் தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.