திருச்செங்கோடு நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 20 21. 2022 கீழ் ரூ4. கோடி.யே 72 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு தினசரி சந்தை என பெயரிடப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு120 காய்கறி கடைகள் 52 வணிக வளாக கடைகள் என 172 கடைகளை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் ஒன்றிய திமுக செயலாளர் அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் சேகர் பொறியாளர் சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.