கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் அடுத்த ஆவாரம்பாளையம் சகோதரியா சங்க வளாகத்தில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆயுர் வஸ்திரா இணைந்து சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த இயற்கை முறையில் ஜவுளி துணிகளுக்கு வண்ணமிடம் நிறுவனத்தை ஆவாரம்பாளையம் சர்வோதயா சங்க செயலாளர் சிவகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, இயற்கை முறையில் உற்பத்தியாகும் சேலைகளின் பணிகளை துவக்கி வைத்தார்,

மேலும் சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனத்தின் வலைதளத்தை திறந்து வைத்தார், இந்நிகழ்வில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் கைத்தறி முருகேசன், ஸ்கை சில்க் மற்றும் எஸ்.ஜி.வி குழும நிறுவனர் பழனிவேல் பரமேஸ்வரி, ஆலோசகர் ராஜாராம், ஆயுர் வஸ்தரா நிறுவனர் தங்க குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது








