அரியலூர் ஒன்றியம் சென்னிவனம், மற்றும் கடுகூர் பகுதிகளில், 6 கோடியே , 92 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக அரியலூர் ஒன்றியம்,சென்னிவனம் -கடுகூர் சாலையில் கிமீ 2/10 ல், ருபாய் 3 கோடியே 30 இலட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான , பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது.விழாவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,அடிக்கல் நாட்டி உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மதிமுக மாவட்ட செயலாளர் க . இ ராமநாதன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு,அரியலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ அறிவழகன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பி சங்கர், கோட்ட பொறியாளர் பொறிஞர் (நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள்) எஸ். சரவணன்,உதவி கோட்ட பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள்) பொறிஞர் .வி ஜெயராமன், உதவி பொறியாளர் பொறிஞர் ஜி அகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து,அரியலூர் -அயனாத்தூர் -குடிசல் – தேளூர் சாலையில் கி.மீ 12/6 ல் , ரூபாய் 3 கோடி 62 லட்சம் மதிப்பீட்டில் , உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான , துவக்க விழா நிகழ்ச்சியில் ,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி, பாலம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மதிமுக மாவட்டச் செயலாளர் க . இராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு ,அரியலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தெய்வ இளைய ராஜன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பி.சங்கர்,கோட்ட பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள்) பொறிஞர் எஸ். சரவணன், உதவி கோட்ட பொறியாளர் எஸ். ஜெயந்தி, இளநிலை பொறியாளர் ஆர்விஜயா, ஒப்பந்ததாரர் விளாகம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




