நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமத்தை பகுதியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் வி.எஸ்.கே.செந்தில்குமார் தலைமையில் அலுவலகம் திறக்கப்பட்டது.


அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ விருந்து வழங்கினார்கள். உடன் மாநில கூட்டுறவு செயலாளர் இரா. குமார், மாநில கழக அமைப்புச் செயலாளர் பி. சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் கே. நாகராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஏராளமானோர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

