• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில்..,பாஜக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்குசிறை தண்டனை மற்றும் அபராதம்..!

ByP.Thangapandi

Jan 12, 2024

உசிலம்பட்டியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது மனைவி, மாமனாருக்கு ஓர் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ், பட்டதாரியான இவரிடமும், இவரது தாயார் ஜான்சிராணியிடமும், பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அதே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாஜக மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் சிவமதன் மற்றும் அவரது மனைவி அபிராமி, அவரது மாமனார் செல்வம் என மூன்று பேர் சுமார் 7,50,000 ரூபாய் பெற்று அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியதோடு, பணத்தை திருப்பி கேட்ட தன்னையும், தனது தாயையும் தாக்கி மோசடி செய்தாக ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் என்ற மூவர் மீதும் கடந்த 2022ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு இன்று உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், மோசடியில் ஈடுபட்டது மற்றும் பணம் கேட்டு வந்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக பாஜக மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் சிவமதன் மற்றும் அவரது மனைவி அபிராமி, அவரது மாமனார் செல்வம் என்ற மூவருக்கும் தலா ஓர் ஆண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா 2,50,000 ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.,
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,