• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் சின்டெக்ஸ் பழுதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

ByN.Ravi

May 1, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி உட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் பழுதடைந்து 30 நாட்களுக்கு மேலாகியும், சரி செய்யாததால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிப்
படுகின்றனர். இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடுமையான வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் முப்பது நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதுகுறித்து 8வது வார்டு பொதுமக்கள் வார்டு கவுன்சிலரான மருது பாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டனர் உடனடியாக 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பழுதடைந்த சின்டெக்ஸ் அடியில் உள்ள மோட்டார் பம்பினை வெளியில் எடுத்து சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் இது போன்ற குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது பல இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீரில் மஞ்சள் கலந்து வருகிறது இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் பொது மக்களின் கோரிக்கைக்கு முறையாக பதிலளிக்க மறுக்கிறார்கள் ஆகையால் வார்டு கவுன்சிலரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன் பின்பு பழுது அடைந்த சின்டெக்ஸை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.