• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருத்துவ உபகரண உற்பத்தியில்
டாப் 5 நாடுகளில் இந்தியா:
மத்திய அமைச்சர் பெருமிதம்

உலக நாடுகளின் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் இந்திய மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
டெல்லியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர்ஜிதேந்திரா சிங் கலந்து கொண்டார். கட்டிட திறப்பு நிகழ்ச்சிக்கு பின்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் உரையாற்றிய அமைச்சர் சிங், செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த 4 நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் டாப் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்து உள்ளது. இவற்றின் விலையானது பிற 4 நாடுகளின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையிலேயே இருக்கிறது என கூறியுள்ளார். இதுதவிர, உலக தரத்திலான உள்நாட்டு உற்பத்தி உபகரணங்கள், வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுடன் ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு வரை குறைந்த விலையில் இந்தியா நோயாளிகளுக்கு கிடைக்க பெறும். பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ மேலாண்மையில் சுய சார்பை பிரதிபலிக்கும் வகையில் நாடு தற்போது உள்ளது என அவர் பெருமிதமுடன் குறிப்பிட்டு உள்ளார்.