• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தமிழக ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்

Byகுமார்

Feb 25, 2024

மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேஎண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜலால் முகமது தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பொருளாளர் முபாரக் அலி, பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் ஜபாருல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன் குமார், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட பலர் மதுரை ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில் மறியல் செய்ய முயன்றவர்களை
திலகர் திடல் காவல் உதவி ஆணையர் ராமக்கிருஷ்ணன் தலைமையில்
இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, எஸ்.ஐ.க்கள் மருதலட்சுமி, பரமசிவம் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.