• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!

ByKalamegam Viswanathan

Jul 3, 2023

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரும் அஜீத்குமாரும் அவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில் இருந்து பெரும் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார், வெடிசத்தம் கேட்ட வீட்டில் ஆய்வு செய்த போது அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பூட்டிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏதும் நிகழவில்லை. இதையடுத்து இந்த வெடி சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாதிரி படம்)