• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி பெருமாள்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்…

குமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி, பூதப்பாண்டி, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் இன்று பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள் புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகம் முன் பாஜகவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200_க்கும் அதிகமானவர்கள். தமிழக அரசின் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து ஆர்பட்டம் நடத்தியதுடன், தமிழக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பாஜக உறுப்பினர் சுபாஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜகவின் மாவட்ட பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சி பாஜக உறுப்பினர் முத்துராமன் முன்னிலையில், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள். பாஜகவின் கண்டனத்தை குறித்த மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர்.