• Fri. May 3rd, 2024

கன்னியாகுமரி இரயில் நிலையம் முன் குஷ்பு, அண்ணாமலையின் உருவ படங்களை தலைகீழாக பிடித்து, திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.

தி மு க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை தொகை குடும்ப தலைவிகளுக்கான உதவி தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல் படுத்தி வரும் நிலையில், நடிகையும், மகளிர் ஆணைக்குழுவின் தலைவரும் ஆன குஷ்பு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையை பிச்சை எனவும், அதை வாங்கும் பெண்கள் எல்லாம் பிச்சைக்காரிகள் என்ற தொனியில் செய்தியாளர்களிடம் பேசியதை கண்டித்து, இன்று மாலை (மார்ச்12)ம் தேதி மாலை கன்னியாகுமரி இரயில் நிலையம் முன் திமுக மகளிர் அணியின் துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஹெலன் டேவிட்சன் தலைமையில் 100க்கும் அதிகமான பெண்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு -வின் படங்களை தலை கீழாக பிடித்து கொண்டு பாஜக, குஷ்பு, அண்ணமாலைக்கு எதிராக கண்டன கோசம் எழுப்பினர்.

பெண்களின் கையில் இருக்கும் படங்களை தலை கீழாக பிடித்திருப்பதின் அடையாளம் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜகவின் அரசு கவிழ்ந்து விடும் என்பதின் அடையாளம் என தெரிவித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணியின் துணைத் தலைவர் ஹெலன் டேவிட்சன், கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அண்ணாமலை, குஷ்பு படங்களை பெண்கள் சாலையில் போட்டு வாரியலால் அடித்தும், செருப்பு காலால் மிதித்தும் குஷ்பு தமிழக பெண்களை பிச்சை எடுப்பவர்கள் என சொன்னதிற்கு திமுக மகளிர் அணியினரது கண்டனத்தை, எதிர்ப்பை தெரிவித்தவர்கள்.

ஹெலன் டேவிட்சன் உட்பட பெண்களின் கண்டன போராட்டத்திற்கு ஆதரவாக வந்திருந்த அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,உறுப்பினர்களும், அண்ணாமலை, குஷ்புவின் படங்களை துண்டு, துண்டுகளாக கிழித்து போட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *