• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கல்லூரியில், இலவச பரிசோதனை முகாம்

ByN.Ravi

Jul 29, 2024

இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தி அமெரிக்கன் கல்லூரியின் தலைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தி அமெரிக்கன் கல்லூரியில், மதுரை சேவை கற்றல் திட்டம் (எஸ்.எல்.பி), மலைப்பட்டி கஸ்தூரி டி.நினைவு, கல்வி மருத்துவம், சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி சார்பில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இருதயம் நுரையீரல் கண் மற்றும் காது உள்ளிnட்ட இலவச பரிசோதனை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தி அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரும் செயலாளருமான தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

ஏ.என்.டி எஜிகேஷனல் மெடிக்கல் தலைவரும் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை முதல்வருமான ஜெயராஜசேகர் முன்னிலை வகித்தார்.

இந்த மருத்துவ முகாமினை, டாக்டர் பியூலா ரூபி கமலம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொழில் முனைவோர் துறை தலைவரும் பேராசிரியருமான டாக்டர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்.

மேலும், இந்த மருத்துவ முகாமின் போது இருதயம் கண்கள், நுரையீரல், காது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த மருத்துவ முகாமில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும், மதுரை மாநகர், கோரிப்பாளையம் மற்றும் சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமினை, ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ்லின் வித்யா, திட்டத் தலைவர் சுனிதா ஈவ்லின் கிரிஸ்டி மற்றும் எஸ்.எல்.பி ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் பொன்ராஜ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்த மருத்துவ முகாமின் போது, பேராசிரியர்கள் வனிதா, பிரபா, நித்யா, பிரியதர்ஷினி, பிரியா, அலெக்ஸ் மற்றும் எஸ்.எல்.பி நிர்வாகிகள் கே.ஆர்.எஸ், நியூ லைஃப், ராக்ஸ், வாஸன் மற்றும் சவுண்ட் குட் ஹியரிங் கேர் மருத்துவமனை, தி அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.