• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மதுரை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் மதுரை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், உச்சப்பட்டி & தோப்பூர் துணைக்கோள் நகர கோட்டத்திற்குட்பட்ட உச்சப்பட்டி பகுதி 1,3,4,5,6,7 & B, தோப்பூர் பகுதி 2,3,4,5 மற்றும் தோப்பூர் தன்னிறைவு திட்ட குடியிருப்புகளில் உள்ள 1391 மனைகள் உள்ளது. இவை குலுக்கல் முறையில் மொத்த கொள்முதல் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஒற்றை சாளர முறையில் அலகுகள் தேர்வு வரும் 29ம் தேதி காலை 11 மணியளவில் மதுரை உச்சப்பட்டி – தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த குலுக்கல் நிகழ்வை யூடியூபில் http:s//youtube.com@tnhbhn என்ற இணைய முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரிலும் வரலாம் அல்லது மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஒளிபரப்பினை நேரடியாக பார்க்கலாம் என உச்சப்பட்டி&தோப்பூர் துணைக்கோள் நகர கோட்ட செயற்பொறியாளர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.