• Thu. Mar 27th, 2025

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீசங்கிலி கருப்பசாமி, ஸ்ரீஅன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா..!

ByKalamegam Viswanathan

Jan 24, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் அன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோயிலில் , 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 
முன்னதாக கடந்த 22 ஆம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்களும் ஐந்து கால யாகசாலை பூஜைகள் கோவில் முன்பு நடைபெற்றன. அங்கு கலசத்தில் உள்ள தீர்த்தங்களை வேத, விற்பன்னர்களால் பூஜிக்கப்பட்ட பின்பு, காலை 10 மணி அளவில் கோவில் கோபுரத்தின் மேல் உள்ள கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை வேதாச்சாரியார்கள் சம்ப்ரோஷணம் செய்தனர். பின்பு, தீர்த்தங்களை கோவில் சுற்றி உள்ள ஏராளமான பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து திருக்கோயில் சார்பாக கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.