• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நான் இறக்கவில்லை, ஊடகப்பண்புதான் இறந்து விட்டது: கதறி அழுத அப்துல்ஹமீத்

Byவிஷா

Jun 29, 2024

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அப்துல்ஹமீது இறந்து விட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், ‘நான் இறக்கவில்லை ஊடகப் பண்புதான் இறந்து விட்டது’ என அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அப்துல் ஹமீத். இவர் சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த சூழலில் அப்துல் ஹமீத் திடீரென உயிரிழந்து விட்டதாக செய்திகள் பரவின.
இதையடுத்து தான் உயிருடன் இருப்பதாகவும் தன்னைக் குறித்து வந்த செய்தி வதந்தி என்றும் அப்துல் ஹமீது மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் மீண்டும் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தான் இறக்கவில்லை எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகு பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்து விட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.