• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 2, 2024

நற்றிணைப்பாடல் 354 :

தான் அது பொறுத்தல் யாவது – கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?

பாடியவர்: உலோச்சனார் திணை: நெய்தல்

பொருள்:

ஐயனே! கழிச்சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின் கண்ணே; இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக் கிடமாயிராநின்றது; அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக!