• Sun. Apr 28th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 22, 2024

நற்றிணைப்பாடல் 323:

ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய – மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் திணை: நெய்தல்

பொருள்:

நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *