• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்கா குருவியில் இளையராஜா!

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்’ போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. இசை வெளியீடு நாளை (ஏப்.,25) நடக்கிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான ‛சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு ‘ஷீ’ – இதை, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இயக்குனர் சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்களையும் இசையமைப்பாளர் இளையராஜா தானே எழுதி இசையமைத்துள்ளார். இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.