• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,

ByS.Ariyanayagam

Apr 10, 2026

எனது பெயரில் இரண்டு கல்லூரியில் இருந்தால் அதை செந்தில்குமார் பேரிலும், அவரது அப்பா பேரிலும் எழுதி வைக்கிறேன். எனக்கு சொத்து இல்லாவிட்டால் அரசியலில் விட்டு செந்தில்குமார் விலக தயாரா என சவால் விட்டு சீனிவாசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களிடம் பேசியதாவது:

சீனிவாசனுக்கு இரண்டு கல்லூரியும் பெரிய காம்ப்ளக்ஸ் இருக்கிறது என்று IP.செந்தில் குமார் பேசியுள்ளார். எனக்கு இரண்டு கல்லூரி, இருந்தால் செந்தில் பெயருக்கும். காம்ப்ளக்ஸ் இருந்தால் அவர் அப்பா பெயருக்கும் எழுதி வைக்கிறேன்.உண்மையிலேயே ஐயா பெரியசாமியின் மகன் தம்பி செந்தில்குமாருக்கு அரசியல் ஆண்மை இருந்தால் எங்கும் பொய் பேசக்கூடாது.

இதில் உண்மை இருந்தால் அப்படியே கட்சியை விட்டு போகிறேன். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் – உண்மை இல்லை என்றால் செந்தில் அரசியலை விட்டு போக தயாரா. திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் திண்டுக்கல் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.