• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை

ByG.Suresh

Nov 4, 2024

மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகரில் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளை,மருதரசர்கள் ஆன்மீக சங்கமம், மருது பவுண்டேஷன், வீரப்பேரரசு மருதுபாண்டியர் எழுச்சி இயக்கம், அகமுடையார் முன்னேற்ற சங்கம், தமிழக தலைமை அகமுடையார் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்- திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளையின் மாநில தலைவர் கோ. பஞ்சாட்சரம், மாநில மகளிர் தலைவி மு. பானுமதி கூறுகையில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகர் பகுதியில் வெண்கல சிலை அமைக்காவிடில் விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஈடுபட போவதாக தெரிவித்தனர். உடன் மருது பவுண்டேஷன் மாநில தலைவர் வேலூர் ஐஸ்வர்யா கார்த்திக் ,செயளாலர் சித்தலூர் கார்த்தி உள்ளிட்ட சமூக அமைப்பினர் உடனிருந்தனர்.