

மணவாளகுறிச்சி அருமணல் ஆலை ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் குமரி எம். பி விஜய்வசந்த் மணவாளக்குறிச்சி அருமணல் ஆலை ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மண்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.
காங்கிரஸ் ஐ. என் டீயூசி கிழக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜா தலைமையில் குருந்தன்கோடு தெற்கு வட்டார தலைவர் கிறிஸ்த் ஜெனித் முன்னிலையில் நடைபெற்றது. வருகை தந்த குமரி எம் பி விஜய்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் அகியோர்களை நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஐ. ஆர். இ.எல் ஒப்பந்தம் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம், மாநில செயலாளர் சினிவாசன்,
ஐ. என் டீயூசி சட்ட ஆலோசகர் ஜாண்செளந்தர், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ், மண்டைக்காடு காங்கிரஸ் தலைவர் சுந்தர் ராஜ், கல்லுக்கூட்டம் பேரூர் காங்கிரஸ் தலைவர் மனோகர் சிங், திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்க பெருமாள், அருமணல் ஆலை ஒப்பந்த தொழிற்சங்க தலைவர் ராஜு, உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


