

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பகுதியில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தில் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியான இன்று அதிகாலையில் முத்திரி பதமிடுதலும், சிறப்பு பணிவிடையும், அதனைத் தொடர்ந்து கொடி பட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் தலைமை பகுதியை சுற்றிலும் வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது காவி உடை அணிந்து தலைப்பாகையணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டு சாமிதரிசனம் செய்தனர். கொடியேற்றத்தில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

