• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சக மனிதர்களை சாதியின் பெயரில் அடையாளம் காணமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி,அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அவரைத் தொடர்ந்து,அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு,பொன்முடி, மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியை ஏற்றார்.அதன்படி,சக மனிதர்களை சாதியின் பெயரில் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் எனவும்,மாறாக அவர்களிடம் சமத்துவதை கடைபிடிப்பேன் என்றும் முதல்வர் உறுதி மொழி ஏற்றுள்ளார்.