• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேர்தலில் தோற்றால் உயிரோடு இருக்க மாட்டேன்..கதறிய வேட்பாளர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 1வது வார்டில் அதிமுக சார்பில் விஜயன் என்பவர்கதறி அழுதபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 1வது வார்டில் அதிமுக சார்பில் விஜயன் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், அவர் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி என்னை கைவிட்டு விட்டதாகவும், இந்த மக்களை நம்பித்தான் நான் போட்டியிடுகிறேன். நான் தோற்கும் பட்சத்தில் உயிரோடு இருக்க மாட்டேன். அப்படி நான் இறந்து போனால் முதல் மாலையே இந்த ஊர்தான் என அணிவிக்க வேண்டும் என கதறி அழுதபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.