பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களின் உச்சபட்ச கனவு என்றால் அது திருமணத்தை பற்றிதான் இருக்கும். ஏன் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றால் இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது அறிவியில் இல்லாத உலகயைும் அறிவியில் மேம்பட்ட உலகையும் ஒன்றுசேர பார்த்துள்ள ஒரே தலைமுறை இதுதான். அவர்களுக்கு முன் இருக்கும் தலைமுறையும் சரி பின் இருக்கும் தலைமுறையும் சரி திருமண அதிர்ஷ்டம் அவர்களுக்கு தான் உள்ளது என்பது 90ஸ் கிட்ஸ்களின் மன நிலை. ஆகவே இதை வைத்து பலரும் மீம்ஸ்களை உருவாக்கி மகிழ்வித்து வருகின்றனர். இப்படி திருமணம் மீது ஆர்வம் கொள்ளாதவர்களே இல்லை என்று நாம் நினைத்திருப்போம். அது முற்றிலும் பொய் என்பதை தென் கொரியாவின் இளைஞர்கள் நிரூபித்துள்ளார்கள். அடேங்கப்பா… இது நம்ம லிஸ்ட்டுலே இல்லையே..!
தென் கொரியாவில் திருமணம் குறித்த இளைஞர்களின் மனப்பான்மை மாறி வருவதால், 2021-ம் ஆண்டில் திருமணம் செய்துகொள்ளும் தென் கொரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம். தென் கொரியாவால் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள தென் கொரியாவில், திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,93,000 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 9.8 சதவீதம் குறைவானதாகும்.இந்த எண்ணிக்கை 1970க்குப் பிறகு மிகக் குறைவு யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி அறிக்கையில் வெளியான தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து 10வது ஆண்டாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நல்ல வேலை கிடைக்காததால், தென் கொரிய இளைஞர்கள், டேட்டிங், திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுதல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இது தவிர, கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக பல பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. தென் கொரிய ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த ஆண்டு 33.4 வயதை எட்டியதாக கூறுகிறது. முன்னதாக, மணமகளின் சராசரி திருமண வயது 31.1 ஆண்டாக இருந்ததாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தென் கொரியர்களின் எண்ணிக்கை 13,000 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் குறைவானது. மேலும், நாட்டின் மொத்த திருமணங்களில் 6.8 சதவீதம் ஆகும். இதற்கிடையில், தென் கொரியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,02,000 ஐ எட்டியது, இது கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை பதிவு செய்துள்ளது. நாட்டில் 18.8 சதவீத ஜோடிகளின் திருமணம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது. கூடுதலாக, 17.6% ஜோடிகள் திருமணமாகி 30 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆகின்றன. அதேசமயம், திருமணமான தம்பதிகளில் 17.1 சதவீதம் பேர் 5 முதல் 9 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.