• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எனக்கு இந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்-ல் நடிக்க ஆசை – விஜய் தேவரகொண்டா..

Byகாயத்ரி

Aug 30, 2022

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பூரி ஜெகநாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியா நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் எதிற்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட, வசூல் ரீதியாக படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஜய் தேவரகொண்டா துபாயில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார். போட்டி நடைபெறும் அவ்விடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவரகொண்டாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது முக்கியமாக உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை ..? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா எம். எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை ஆனால் ஏற்கனவே, அந்த படத்தில் சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால்,எனக்கு விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்துள்ளார்.