• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொண்டர்களைப் பார்த்து வணக்கம் வைத்தேன் போலீசாரிடம் கம்பீரமாக விவாதம் செய்த அண்ணாமலை-கோவையில் பரபரப்பு

BySeenu

Apr 15, 2024

பிரச்சாரம் செய்யவில்லை எனது கட்சிக்காரர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தான் செய்தேன். அதற்காக போலீசார் நான் பிரச்சாரம் செய்தேன் என அத்துமீறினார்கள். இது என்ன நிநாயம்.., என வேதனை கலந்த கம்பீரமாக தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜக”வினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாக, பாஜகவினர் மீது நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள் என எரிச்சலோடு பேசிய போலீசாரை கண்டித்து, பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் இரவு நேரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் வருகிறார். இன்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இதைக் கண்ட போலீசார் அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை எங்கள் மாநில தலைவர் சென்று கொண்டிருக்கிறார். அவரை வழி அனுப்பத்தான் வந்தோம் என்று போலீசாரிடம் பாஜகவினர் தெரிவித்தனர்.

பின்னர் அது வாக்குவாதமாக மாறி பிரச்சார வேனில் இருந்த அண்ணாமலை ஏம்ப்பா இப்படி செய்றீங்க.., ஒரு தலைவன் போகும்போது தொண்டர்கள் கூடுவது வழக்கம்தான் இதை புரிந்து கொண்டால் நல்லது என அவரது பாணியில் போலீசாரிடம் பேச, அதற்குள் கோயம்புத்தூர் சம்பித்து விட்டது.

சட்டத்தை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என போலீசார் உறுதியாக தெரிவித்தனர். பின்பு பாஜக”வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒண்டிபுதூர் சாலையில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக இரவு நேரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.