• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரிப்பு..,

ByS.Ariyanayagam

Apr 7, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் எப்போதும் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லக்கூடியவன்.

எனக்கு வாக்களித்தால் இன்னும் பல நல்ல திட்டங்களை தொகுதி மக்களுக்கு செய்வேன். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த எனக்கு வாய்ப்பு தாருங்கள். குடிநீர் உட்பட அடிப்படை பிரச்சனைகள் பல கிராமங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரச்சினைகளும் தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் திமுக ஆட்சியில் முகம் மலர்ச்சியை காண முடிகிறது.

திமுக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பொதுமக்கள் தாரை தப்பட்டை முழங்க , செல்லும் இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.